/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் தரைப்பாலத்தில் கவிழ்ந்த கார் குறித்து விசாரணை
/
அரகண்டநல்லுார் தரைப்பாலத்தில் கவிழ்ந்த கார் குறித்து விசாரணை
அரகண்டநல்லுார் தரைப்பாலத்தில் கவிழ்ந்த கார் குறித்து விசாரணை
அரகண்டநல்லுார் தரைப்பாலத்தில் கவிழ்ந்த கார் குறித்து விசாரணை
ADDED : டிச 23, 2025 07:17 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே சாலையோர சிறு பாலத்தில் மோதி கவிழ்ந்த கார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், காடகனுார் பஸ் நிறுத்த திருப்பம் தரைப்பாலத்தில் நேற்று காலை பி.ஓய்.05.எஸ். 6676 பதிவு எண் கொண்ட புதுச்சேரி மாநில கார் ஒன்று தலை குப்புற கவிழ்ந்து கிடந்தது.
அரகண்டநல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது, நள்ளிரவில் வந்த கார் பாலத்தின் தடுப்பு மீது மோதி கவிழ்ந்திருக்கலாம்.
காரில் ஏர்பேக் பலுான் விரிந்துள்ளதால், காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கார் புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்த ரகுநாத் என்பவர் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.
விபத்திற்கு உள்ளான காரில் எத்தனை நபர்கள் வந்தனர். யாருக்கு காயம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.