/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காட்டுவன்னஞ்சூரில் அனுமன் ஜெயந்தி விழா
/
காட்டுவன்னஞ்சூரில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : டிச 20, 2025 07:09 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூரில் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி காலையில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரித்து, வெள்ளி காப்பு அணிவித்து வடமாலை அணிவிக்கப்பட்டது. மகா தீபராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம கர்த்தா வெங்கடேச பாகவதர் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.
இதில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், மூத்த வழக்கறிஞர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

