/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்; சித்தப்பட்டினத்தில் கலெக்டர் துவக்கி வைப்பு
/
விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்; சித்தப்பட்டினத்தில் கலெக்டர் துவக்கி வைப்பு
விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்; சித்தப்பட்டினத்தில் கலெக்டர் துவக்கி வைப்பு
விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்; சித்தப்பட்டினத்தில் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : மார் 07, 2024 01:06 AM

ரிஷிவந்தியம் : சித்தப்பட்டினத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண் முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சித்தப்பட்டினத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார், துணை இயக்குநர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது: விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டத்தில், மகசூலை அதிகரித்து, பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்காக விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ள உழவன் செயலியில், வேளாண்மை சார்ந்த அனைத்து தகவல்களும் உள்ளது. உழவன் செயலியில் எந்த திட்டத்தில் பதிவு செய்தாலும், முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்டம் வழங்கப்படும். மண்வளம் என்ற திட்டத்தில், மண்ணின் வளம் மற்றும் தேவையை தெரிந்து கொள்ள இலவசமாக மண் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்களை நிலத்தில் பயன்படுத்தலாம், என்னென்ன விளை பொருட்கள் விளையும் என்ற விபரத்தை தெரிந்து, அதிக மகசூல் பெறலாம்.
சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். முன்னதாக, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
கூட்டத்தில், ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குனர் சியாம்சுந்தர், வாழவச்சனுார் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், சின்னசேலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விமலாராணி, உழவியல் துறை இணை பேராசிரியர் முருகன் உட்பட வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

