/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு தொழில் முனைவு முகாம்
/
தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு தொழில் முனைவு முகாம்
தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு தொழில் முனைவு முகாம்
தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு தொழில் முனைவு முகாம்
ADDED : செப் 09, 2025 09:24 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் தொழில் முனைவு, சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியல் பழங்குடியின மக்களிடையே தொழில் முனைவு குறித்தும், தொழில் முனைவோருக்கென உள்ள சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பரப்புரை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் உள்ள பகுதிகளில் 31 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முகாமில் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நடைமுறைகள், தொழில் திட்டங்கள், தொழில் தொடங்குவதற்கான ஆயத்தங்கள், தொழிலை நடத்தவும், மேம்படுத்தவும் உள்ள யுக்திகள், சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.
வங்கிகளால் ஏற்கத்தக்க திட்ட அறிக்கைகளை வடிவமைப்பு, விண்ணப்பங்களை பதிவிடவும் வழிகாட்டுதல் வழங்கப்படும். வரும் 12ம் தேதி கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள ஆரம்பூண்டி ஊராட்சி அலுவலகம் அருகிலும், வாரம் கிராம துவக்கப்பள்ளி அருகிலும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பிணையமில்லா கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராஜா நகர், கள்ளக்குறிச்சி என்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும், 04151 294057 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.