/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது செறிவூட்டப்பட்ட சத்தான அரிசி கலெக்டர் பிரசாந்த் தகவல்

ADDED : அக் 27, 2024 11:21 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன்கடை மூலம் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படுகிறது.
அதாவது, அரிசியை மாவாக அறைத்து அதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய தாதுப்பொருட்களை சேர்த்து மீண்டும் அரிசி குறுணைகளாக உருவாக்கி 1:100 என்ற விகிதத்தில் ரேஷன் அரிசியில் கலந்து வழங்கப்படுகிறது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். போலிக் அமிலம், கருவளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் மிகவும் நல்லது.
அதிக சத்துகளை உள்ளடக்கிய செறிவூட்டப்பட்ட அரிசி, அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையைக் கொண்டது.
இது பிளாஸ்டிக் அரிசி அல்ல.
இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொது விநியோகத்திட்ட அரிசியினை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.