/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணையில் மீன்பாசி குத்தகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
/
மணிமுக்தா அணையில் மீன்பாசி குத்தகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
மணிமுக்தா அணையில் மீன்பாசி குத்தகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
மணிமுக்தா அணையில் மீன்பாசி குத்தகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : ஆக 07, 2025 02:38 AM
கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பதிவிறக்கம் செய்துசமர்ப்பிக்கலாம்.
இந்த இணையவழி ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை இணையதளத்தில் 19494/F3/2024 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை பதிவிட்டு கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை இன்று 7ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 62/56 ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன்பாசிக் குத்தகைக்கு பெற விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

