/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம்
/
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம்
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம்
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம்
ADDED : ஆக 12, 2025 02:05 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமை பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன் முன்னிலை வகித்தனர். முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று 12ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில், 22,107 கார்டுகளின் வீடுகளுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமையில் மின்னணு எடைத்தராசு, இ- பி.ஓ.எஸ்., கருவி மற்றும் குடிமைப்பொருட்களை மூடிய வாகனங்களில் எடுத்து சென்று வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், தவணை தவறிய கடன்கள் மற்றும் வசூல் விபரம், சிறப்பு கடன் தீர்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா, சவிதாராஜ், நிர்மல், பிரியதர்ஷினி, கள அலுவலர்கள், செயலாட்சியர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

