/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
ADDED : டிச 13, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 58; அதே ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தினகரன். இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
கடந்த 8ம் தேதி இரவு தினகரன், சுதன், மணிவண்ணன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, ஆதிமூலத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் தினகரன் உட்பட 6 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

