/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
/
பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2025 02:17 AM
திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே தனியார் மினி பஸ் தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தனியார் மினி பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, திருக்கோவிலுாரில் இருந்து தனகனந்தல் சென்று கொண்டிருந்தது. பஸ் டிரைவரான மேலப்பழங்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் கார்மேகம், 24; பஸ்சை அதிவேகமாகவும், தொடர்ச்சியாக ஹாரன் அடித்து கொண்டு சென்றார்.
தனகனந்தல் ரேஷன் கடை அருகே நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன், 40; ஏன் இப்படி தொடர்ச்சியாக ஹாரன் அடித்து கொண்டு வேகமாக செல்கிறாய் என கேட்டார்.
ஆத்திரமடைந்த டிரைவர் கார்மேகம், கண்டக்டர் நெடுமுடையானை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன், 20; பஸ் உரிமையாளர் வசந்தகுமார், 50; உள்ளிட்ட நான்கு பேர், சரவணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சரவணன், மினி பஸ் டிரைவர் கார்மேகத்தை தாக்கி மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.