/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
/
ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ADDED : ஏப் 08, 2024 06:57 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில்1,803 ஓட்டுச்சாவடி மையங்களுக்குஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சுழற்சி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.ஓட்டுச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள்...
கலெக்டர் தலைமையில் இரண்டாம் கட்ட சுழற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சட்டசபை தொகுதி வாரியாக தேர்வு செய்வதற்கான கணினி முறையில் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் முதல் சுழற்சி கடந்த மார்ச் 23ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
தற்போது கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 21 பேர் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கள்ளக் குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆத்தார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி பணி நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வை யாளர் அசோக்குமார் கார்க் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் கணினி முறையில் நடந்தது.
பின்னர், சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலினை, கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்களிடம் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

