/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமத்திலும் கூடுதல் பணி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமத்திலும் கூடுதல் பணி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமத்திலும் கூடுதல் பணி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமத்திலும் கூடுதல் பணி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல்
ADDED : அக் 02, 2024 11:33 PM

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோமதிசுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், கவுன்சிலர் சுசீலாபாண்டுரங்கன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கலெக்டர் பிரசாந்த் பேசும் போது, ''மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை அதிகப்படுத்தவும், சுய உதவிக்குழுவில் காலியிடம் இருந்தால் அவற்றை நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவில் இணைய விரும்பும் பெண்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவியை அணுக வேண்டும்.
கருணாநிதி கனவு இல்ல திட்டம் அல்லது பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் வீடு கட்டினால், மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுழல் நிதி கடனுதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அனைத்து கிராமத்திலும் ஏற்கனவே வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடுகளுடன் தற்போது கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சரியான நேரத்திற்கு விவசாய உபகரணங்களுடன் பணிக்கு வர வேண்டும்' என பேசினார்.
தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கலெக்டர் தலைமையில் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில், திட்ட இயக்குநர்கள் ரமேஷ்குமார் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), சுந்தர்ராஜன் (மகளிர் திட்டம்), மாற்றுத்தினாளி நல அலுவலர் சுப்ரமணியன், தாசில்தார் பாலகுரு, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, துணைத்தலைவர் சரவணன், வி.ஏ.ஓ., பாக்யராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

