/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்து அபாயம், தொடர் நெரிசல்: தீர்வு காண வலியுறுத்தல்
/
விபத்து அபாயம், தொடர் நெரிசல்: தீர்வு காண வலியுறுத்தல்
விபத்து அபாயம், தொடர் நெரிசல்: தீர்வு காண வலியுறுத்தல்
விபத்து அபாயம், தொடர் நெரிசல்: தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஏப் 02, 2025 06:21 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம், திருவெண்ணெய்நல்லூர் சாலை, சென்னை சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது.
உளுந்தூர்பேட்டையை பொருத்தவரை ஒரு போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்ளிட்ட 17 போக்குவரத்து போலீசார் உள்ளனர். இதில், இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 3 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
மற்ற 11 போக்குவரத்து போலீசாரும் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கோர்ட், எஸ்.பி., உள்பட பல்வேறு இடங்களில், மாற்று அலுவல் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன், டோல்கேட் அருகே இணைப்பு சாலை பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் சிலர், பேரிகாடுகளை அகற்றிவிட்டு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினர்.
இதனால் கடந்த, 21ம் தேதி தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்கு போக்குவரத்து போலீசார் இல்லாதது விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பஸ் நிலைய பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது போக்குவரத்து போலீசார் போதிய அளவில் இருப்பதில்லை. நகரில் கட்டுப்படுத்த முடியாமல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
அதனால் போக்குவரத்து போலீசாரை மாற்றுப் பணிக்கு அனுப்புவதை தவிர்த்து போக்குவரத்தை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்,' என்றனர்.

