/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் விதிமுறை மீறல்; வேட்பாளர்கள் மீது வழக்கு
/
தேர்தல் விதிமுறை மீறல்; வேட்பாளர்கள் மீது வழக்கு
ADDED : மார் 27, 2024 11:17 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகிய இருவரும் கடந்த 25ம் தேதி (திங்கட்கிழமை) வேட்புமனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டர் எல்லைகோட்டினை தாண்டி அனுமதி இல்லாமல் வந்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தி.மு.க., வேட்பாளர் மலையரசன் மற்றும் 10 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதியின்றி மந்தைவெளியில் இருந்து ஊர்வலமாக சென்றதாகவும், ஒலி பெருக்கியை பயன்படுத்தியதாகவும், தேர்தல் விதிமுறை மீறி 100 மீட்டர் எல்லை கோட்டினை தாண்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அக்கட்சியின் வேட்பாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல்பாபு தலைமையில் 1,000 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

