/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூரில் வி.சி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
திருக்கோவிலூரில் வி.சி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருக்கோவிலூரில் வி.சி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருக்கோவிலூரில் வி.சி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : மார் 24, 2024 04:53 AM

திருக்கோவிலூர்: விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளரை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியின் இண்டியா கூட்டணி வேட்பாளராக வி.சி.க., சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
இவரை அறிமுகம் செய்து வைக்கும் செயல்வீரர்கள் கூட்டம் திருக்கோவிலூர், தேவிமுருகன் திருமண மண்டபத்தில் நடந்தது.
தி.மு.க., மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார். எம்.பி., கௌதம சிகாமணி, எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பொன்முடி வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், பிரபு, பிரேமாஅல்போன்ஸ், நகர செயலாளர்கள் கோபி கிருஷ்ணன், கணேசன், சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செல்வராஜ்.
வி.சி.க., மாவட்டத் துணைச் செயலாளர்கள் இளந்திரையன், கற்பகம், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி, இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் சரவணன், காங்., மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன், மாவட்ட தலைவர் சீனிவாச குமார், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், சவுரிராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

