/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : ஏப் 25, 2024 02:38 AM

உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா இம்மாதம் 9ல் துவங்கியதையடுத்து, நேற்று முன்தினம் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி காலை 6:00 மணிக்கு கூவாகம் கிராமத்தில் இருந்து கூத்தாண்டவர் சிரசு கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.
காலை 8:28 மணிக்கு தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. திருநங்கையர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தொட்டி, நத்தம் கிராமங்கள் வழியாக பந்தலடிக்கு தேர் சென்றடைந்தது. அங்கு நடந்த அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கையர் தங்கள் தாலியை அறுத்தெறிந்து வெள்ளை புடவை கட்டி, விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர். பின், அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்து, தங்கள் ஊருக்கு திரும்பத் தொடங்கினர்.
இன்று 25ம் தேதி விடையாற்றி உற்சவமும், நாளை 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.ம

