/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
/
சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 23, 2024 12:17 AM

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புணரமைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷகம் துவங்கியது.
விழாவில் நவகிரக ேஹாமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாக வேள்வி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வேதபாராயணம் மஹாபூர்ணாகுதி, கலச புறப்பாடுகளுக்கு பின் காலை 10.30 மணியளவில் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது.
விழாவில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அருணகிரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, தர்மகர்த்தா குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இரவு 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

