/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கி வைப்பு
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கி வைப்பு
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கி வைப்பு
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கி வைப்பு
ADDED : ஏப் 08, 2024 06:54 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதிக்கான கூடுதல் ஓட்டு பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி லோக் சபா தொகுதி ஓட்டு பதிவிற்காக, கூடுதலாக கடலுார் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 350 ஓட்டு பதிவு இயந்திரங்கள், தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் ஓட்டு பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறந்து வைத்து சரிபார்ப்பு பணியை மேற்கொண்டார்.
தொடர்ந்து, இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை 'பெல்' பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.
பணிகளை விரைந்து சரியாக மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், தேர்தல் தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.