/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா
/
தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா
ADDED : ஆக 12, 2024 06:34 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனி ராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.
நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மாணவர்களுக்கு வங்கியின் டெபிட் கார்டை வழங்கினர்.
நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், கவுன்சிலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் விக்னேஷ், தமிழ்ப் புதல்வன் திட்ட அலுவலர் ஆண்டனிராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

