/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேட்பாளர் முன்னிலையில் தி.மு.க.,வினர் தள்ளு முள்ளு
/
வேட்பாளர் முன்னிலையில் தி.மு.க.,வினர் தள்ளு முள்ளு
வேட்பாளர் முன்னிலையில் தி.மு.க.,வினர் தள்ளு முள்ளு
வேட்பாளர் முன்னிலையில் தி.மு.க.,வினர் தள்ளு முள்ளு
ADDED : ஏப் 03, 2024 11:21 PM
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே வேட்பாளர், எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., கட்சியினரிடையே நெட்டி தள்ளி தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார், உ.செல்லுார் , பாண்டூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ.. மணிக்கண்ணன், ஒன்றிய செயலாளர் முருகன், வி.சி., வேட்பாளர் ரவிக்குமாருடன் வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது பாண்டூர் பகுதியில் தி.மு.க.. கிளை செயலாளர் பாஸ்கரன் இருக்கும் பகுதியில் தேர்தல் வாகனம் நிறுத்த வேண்டாம் என தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதனால் தேர்தல் பிரசார வாகனம் நிற்காமல் சென்று கொண்டிருந்தபோது, கிளை செயலாளர் பாஸ்கரன் தரப்பினர், பின் தொடர்ந்து சென்று பிரசார வாகனத்தில் இருந்த சக்திவேல் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வேட்பாளர்,எம்.எல்.ஏ., முன்னிலையில் உடன்பிறப்புகள் இரு கோஷ்டிகளாக தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

