/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவக்கல்லுாரி அருகே குப்பை கழிவுகள்: ஜே.சி.பி.,மூலம் அகற்றம்
/
மருத்துவக்கல்லுாரி அருகே குப்பை கழிவுகள்: ஜே.சி.பி.,மூலம் அகற்றம்
மருத்துவக்கல்லுாரி அருகே குப்பை கழிவுகள்: ஜே.சி.பி.,மூலம் அகற்றம்
மருத்துவக்கல்லுாரி அருகே குப்பை கழிவுகள்: ஜே.சி.பி.,மூலம் அகற்றம்
ADDED : மே 20, 2024 06:48 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி அருகே திறந்தவெளியில் கொட்டப்பட்ட கழிவுகள் தினமலர் செய்தி எதிரொலியால் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி அருகே பாதுகாப்பற்ற அபாயகரமான மருத்துவக்கழிவுகள் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி மூட்டைகளாக கட்டி, திறந்தவெளியில் கொட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று உடனடியாக அந்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மொத்த கழிவுகளும் மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக முற்றிலுமாக அகற்றப்பட்டது.
மேலும் அங்கு கொட்டப்பட்டிருந்தது மருத்துவக்கழிவுகள் அல்ல எனவும், அந்த இடத்தில் கொட்டப்பட்டிருந்தது வணிக நிறுவனத்தினரின் குப்பைகள்தான் என மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு தெரிவித்தனர்.