/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்... ஆய்வு; கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்...
/
கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்... ஆய்வு; கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்...
கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்... ஆய்வு; கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்...
கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்... ஆய்வு; கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின பார்வையாளர்...
ADDED : ஏப் 10, 2024 02:21 AM

கள்ளக்குறிச்சி : ஓட்டுப் பதிவு நாள் நெருங்கி வருவதால், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, பறக்கும் படை மற்றும்நிலை கண்காணிப்பு குழுவினருக்கு சிறப்பு தேர்தல் செலவினப் பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மூலம் நாள்தோறும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பண விவரங்கள், வேட்பாளர்களின் செலவினங்களை கணக்கிடுவது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சிறப்பு தேர்தல் செலவினப்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, பறக்கும் படையினால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் செலவினங்கள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தொகுதி தேர்தல் செலவினப்பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் அறிவிப்பு நாள் முதல் தற்போது வரை வணிகர்களிடமிருந்து மொத்தமாக ஏதேனும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்றும், வங்கிகள் மூலமாக பணம் எடுத்து செல்லப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின், ஓட்டுப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை பணிகளை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ள ஏதுவாக தடுப்பு கட்டை அமைத்து கொடுக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாட்களுக்கு முந்தையநாள் கூடுதல் பணியாளர்களை நியமித்து தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அமைத்துள்ள ஊடக கண்காணிப்பு பிரிவு மற்றும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள் ஜி.பி.எஸ்., மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும், தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்வது குறித்த தேர்தல் கட்டுபாட்டு அறையினை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சங்கர், (பொது) ரமேஷ், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தங்கதுரை, முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வணிக வரி அலுவலர் நல்லுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

