/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க கலெக்டர் உத்தரவு: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
/
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க கலெக்டர் உத்தரவு: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க கலெக்டர் உத்தரவு: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க கலெக்டர் உத்தரவு: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
ADDED : ஏப் 30, 2024 08:01 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தாசில்தார்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
: கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் மற்றும் குடிநீர் தேவைப்படும் இடங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் குடிநீர் தொடர்பான பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும், குடிநீர் தேவை குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு போவதை முன்கூட்டியே கண்டறிந்து, அப்பகுதியில் போதுமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
பி.டி.ஓ.,க்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து, அனுமதியின்றி குடிநீர் இணைப்பு பயன்படுத்துபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையற்ற முறையில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
கோடை காலத்தில் குடிநீர் வழங்கும் மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பழுது ஏற்படும் மின் மோட்டார்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும், அல்லது விடுமுறை என்பதால் அரசு பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பள்ளிகளிலிருந்து குடிநீரை எடுத்து மக்களுக்கு வழங்கலாம். அவசர தேவை ஏற்படும் இடங்களில் தனியார் விவசாய கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று வழங்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.
தாசில்தார்கள் பிரபாகரன், குமரன், கமலகண்ணன், பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், துரைமுருகன், செந்தில்முருகன், கொளஞ்சி, ஜெகநாதன், மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.

