/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
100 சதவீத ஓட்டுப் பதிவு கோலம் மூலம் விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டுப் பதிவு கோலம் மூலம் விழிப்புணர்வு
ADDED : மார் 27, 2024 11:13 PM
சின்னசேலம் : சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி மகளிர் குழுவினர் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள் மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல் ஆகிய இரண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 100 ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கோலங்கள் போட்டனர்.
கேலங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் சின்னசேலம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.

