/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED : மார் 24, 2024 04:56 AM

உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை பிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 22ம் தேதி காலை 7.30 மணி அளவில் யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 10.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை வழிபாடு நடந்தது. இரவு 8 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஆலயத்திற்குள் உலா வந்தது. நேற்று காலை 5 மணியளவில் பஞ்சமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
காலை 7 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
காலை 10.30 மணியளவில் திருத்தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து திருத்தேர் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலைச் சென்றடைந்தது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

