/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 29, 2024 05:36 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்கள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு முதல்வரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுடன் 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2024ம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆகஸ்டு 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்க 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியன்று 15 வயது நிரம்பியவராகவும், 2024 மார்ச் 31ம் தேதி 35 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
இந்த விருதுக்கு, 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024 மார்ச் 31ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்று இணைக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அந்த தொண்டுகள் கண்டறியக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும், உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லுாரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் மே 1ம் தேதி முதல் 15ம் தேதி மாலை 4:00 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் மொபைல் 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

