/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருமண நிதி உதவித்திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
திருமண நிதி உதவித்திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 04, 2025 09:43 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமண நிதி உதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த தகுதியான பயனாளிகள் வரும் 15ம் தேதிக்குள் இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதில் ஈ.வெ.ரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற தாயின் விதவைச் சான்று, மணமகள் வயது சான்று, வருமான சான்று (ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்குள்) இருக்க வேண்டும். கல்விச்சான்று, திருமண பதிவு சான்று, மணமகள் ஜாதிச் சான்று, மணமகள் இருப்பிடச் சான்று, மணமகள் தந்தை இறப்புச் சான்று, திருமண அழைப்பிதழ், திருமணத்திற்குள் முன் 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற கலப்பு திருமண சான்று, மணமகள் மணமகள் ஜாதிச் சான்று, கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, திருமண பதிவுச் சான்று, திருமண அழைப்பிதழ், திருமணம் நடைபெற்ற இரண்டு ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அறியலாம்.

