/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., முடக்கியது அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 15, 2024 03:53 AM

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, ரிஷிவந்தியத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று மின்சாரம், பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விலைவாசி பொருட்களின் விலைகளையும் உயர்த்தி விட்டது. முன்னாள் முதல்வர் ஜெ., மகளிர் மற்றும் மாணவர்கள் நலனுக்காக அமல்படுத்திய தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டி, விலையில்லா ஆடு, விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் முடக்கியுள்ளார்.
தற்போது, சிலருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை கொடுத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு ரத்து, சிலிண்டர் விலை குறைப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து, தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர் அருணகிரி, கதிர் தண்டபாணி, நிர்வாகிகள் கஜேந்திரன், காந்தி, வைத்தியநாதன், குமார், சம்பத், சலீம், ரஜினி ஏழுமலை, அய்யப்பன், சுரேஷ், சந்திரசேகரன், மணிகண்டன், ஸ்ரீதர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அந்தியூர், குன்னியூர், வெங்கலம், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, முனிவாழை உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.