/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி

ADDED : ஏப் 16, 2024 11:16 PM

கள்ளக்குறிச்சி- கல்வராயன்மலை வாழ்மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடபட்டார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, கல்வரயன்மலை வடக்கு ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு திட்ட பணிகளை எடுத்துரைத்து மலைவாழ் மக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தார்.
அப்போது சேராப்பட்டு, குறும்பலுார் ஆணை முடிவு, ஆவலுார், எருக்கம்பட்டு, பெரம்பூர், இன்னாடு உட்படபல்வேறு கிராமங்களில் பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வேட்பாளர் குமரகுரு பேசுகையில்; கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள எட்டியார் நீர்வீழ்ச்சி மற்றும் சிறுகளூர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வரும் நிலையில் சாலை வசதிகள் ஏற்படுத்தி சுற்றுலா தளமாக்குவேன்.
இப்பகுதி கிராமங்களுக்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற்று அரசின் சிறப்பு நிதியை பெற்று சாலை அமைக்கப்படும்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதரம் உயர்த்தும் வகையில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்து தருவேன் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். தி.மு.க., தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது.
வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் அசோகன், குப்பன், முன்னள் ஒன்றிய சேர்மன் வெள்ளி உட்பட அ.தி.மு.க.,-தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.