/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : மார் 27, 2024 11:09 PM

திருக்கோவிலுார் : விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரகண்டநல்லுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, இளங்கோவன், பழனி, சந்தோஷ், ஏகாம்பரம், ராமலிங்கம், தனபால் ராஜ், முன்னிலை வகித்தனர். அரகண்டநல்லூர் நகர செயலாளர் ராஜ்குமார் துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வேட்பாளர் பாக்யராஜை அறிமுகம் செய்து வைத்து, பேசினார். திருவெண்ணெய்நல்லுார் நகர செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரசு ரங்கநாதன், மாவட்ட மாணவர் அணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

