ADDED : மார் 31, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : அரகண்டநல்லுாரில் அனுமதியின்றி தேர்தல் கூட்டம் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
அரகண்டநல்லுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடந்த 26ம் தேதி அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது.
அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

