/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி
ADDED : ஏப் 09, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சங்கராபுரத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுதும் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் கலைக்குழுவினர் மூலம் நுாறு சதவீத ஒட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி உடனிருந்தனர்.

