ADDED : டிச 25, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், டிச. 25-
தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியை சேர்ந்த முருகேஷ் மகள் யமுனா, 19; துணிக்கடை ஊழியர். கடந்த, 21ம் தேதி இரவு, 8:00 மணியளவில், வேலை முடிந்து தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில், செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது ஒரு ஆசாமி அவரது செல்போனை பறித்து ஓட்டம் பிடித்தான். யமுனா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் விரட்டியும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் போலீசார் 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்தனர். எரகாம்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன், 19, என்பவரை, அவரது வீட்டில் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

