/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
/
கோவிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
கோவிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
கோவிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
ADDED : டிச 11, 2024 01:18 AM
கோவிலுக்கு வந்த தொழிலாளி
கிணற்றில் குதித்து தற்கொலை
புன்செய்புளியம்பட்டி, டிச. 11-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் கருப்புசாமி, 40, நெசவு தொழிலாளி. மனைவி தங்கமணியுடன் நேற்று முன்தினம் மாலை புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கருப்பராயன் கோவிலுக்கு வந்தார்.
தரிசனம் செய்து கொண்டிருந்த கருப்புசாமி திடீரென சாலையை கடந்து கோவிலுக்கு எதிரே சாலையோரம் இருந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து விட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. தகவலறிந்து சென்ற புன்செய்புளியம்பட்டி தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உதவியுடன், கருப்புசாமியை சடலமாக மீட்டனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருப்புசாமி தனது மனைவியுடன் சேர்ந்து வீட்டில் நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

