sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது

/

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது


ADDED : அக் 03, 2024 06:54 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கனி மார்க்கெட் வணிக வளாக சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், கடை உரிமையாளரை போலீசார் கைது செய்-தனர்.

ஈரோடு, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் நான்கு தளங்களில் செயல்படுகிறது. முதல் தளத்தில் ஈரோடு, செட்டிபாளையம் முருகேசன், 52, என்பவர் கடை எண்-194ஐ வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பின்புறம் உள்ள மற்றொரு கடையை வாட-கைக்கு எடுத்தார். இரு கடைகளையும் இணைத்து விரிவாக்கம் செய்ய, இடையே உள்ள தடுப்பு சுவரை இடித்து, ஒரே கடையாக மாற்ற திட்டமிட்டார்.

கடந்த, 30 அதிகாலை, 2:30 மணியளவில் சுவரை இடிக்கும் பணியில் கருங்கல்பாளையம் சுப்பிர-மணி, 55, ஆனந்த், 45, ஆகியோர் பணி செய்தனர். அப்போது சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாட்டில் சிக்கி சுப்பிரமணி இறந்தார். ஆனந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்த முரு-கேசன் மீது, அஜாக்கிரதையாக கட்டுமான பணி செய்தல், தொழிலாளியின் உயிரிழப்புக்கு கார-ணமாக இருந்தது என, இரு பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து முரு-கேசனை கைது செய்தனர். ஈரோடு நீதிமன்ற உத்-தரவுப்படி, கோபி மாவட்ட சிறையில் முருகே-சனை அடைத்தனர்.தவிர, வணிக வளாக கடையை வாடகைக்கு எடுத்த ஒப்பந்த விதியை மீறியதாகவும், கடையை சேதப்படுத்தியதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். மேலும், கடையை சேதப்படுத்தியதற்காக, முரு-கேசனுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்து, கடை வாடகை ஒப்பந்தம் ரத்து செய்து, கடையை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us