/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
181வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தி.மு.க., அரசுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி

ADDED : நவ 12, 2024 01:45 AM
181வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
தி.மு.க., அரசுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி
ஈரோடு, நவ. 12-
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் செய்து மனு வழங்கினர். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசு தலைமை வகித்தார். மாநில தலைவர் முரளி முன்னிலை வகித்தார்.
தமிழகத்தில் கடந்த, 2011-12ம் கல்வி ஆண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஈரோடு மாவட்டத்தில், 356 பேர் பணி செய்கின்றனர். மாதம், 12,500 ரூபாய் ஊதியத்தில் பணி செய்கிறோம். குறைவான ஊதியம் என்றாலும், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி பணி செய்கிறோம். எங்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்காக, பணி நிரந்தரம் செய்ய கோரி வருகிறோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2016 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி எண்:191, 192; 2021 தேர்தலில் வாக்குறுதி எண்: 181ல் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால், ஆட்சி அமைந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் விரைவில் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம், அடுத்த கட்ட போராட்டங்களிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.