/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம்
/
இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம்
ADDED : செப் 10, 2024 07:31 AM
தாராபுரம் : தாராபுரத்தில் நேற்று நடந்த, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில், 76 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக தாராபுரம் அமராவதி சிலை அருகே மதியம், 2:00 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை, இந்து இளைஞர் முன்னணி மாநில செயலாளர் சண்முகம் முன்னிலையில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து தொடங்கிய ஊர்வலம் வசந்தா ரோடு, பெரிய கடை வீதி, ஜவுளிக்கடை வீதி, பைவ் கார்னர் வழியாக சென்று அமராவதி நதிக்கரையில் நிறைவடைந்தது. அங்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.ஜவுளிக்கடைவீதி பள்ளிவாசல் அருகே, 11 அடி உயர விநாயகர் சிலை மின் வயரில் சிக்கியது. உடனே விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் ஒயரை அகற்றி சிலைகளைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமையில், ஏ.டி.எஸ்.பி., நான்கு டி.எஸ்.பி.,க்கள், எட்டு இன்ஸ்பெக்டர் உட்பட, 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

