/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு
/
விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு
ADDED : செப் 13, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கச்சேரிமேட்டில், ஈரோடு மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு தற்போது, 159 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை உளவு மற்றும் விழிப்புணர்வு பிரிவு (சிறைத்துறை) டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, சிறையில் நேற்று ஆய்வு செய்தார்.
கடந்த ஜூலை மாதத்தில், 'இ-பிரிசன்' வசதி மூலம், மாவட்ட சிறையில் இருந்த ஒரு சிறைவாசி, வீடியோ காலில் பேசிய வீடியோ பதிவு வெளியான விவகாரம் குறித்து, சிறை அதிகாரிகளிடம் விசாரித்தார். தவிர சிறைவாசிகளை சந்தித்து, அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.

