ADDED : டிச 21, 2025 06:31 AM

நம்பியூர்: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி, மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு வி.ஹெச்.பி., சார்பில், நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயிலில் போட்டோ வைத்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அனுமதி பெறாமல் அஞ்சலி செலுத்தியதாக கூறி, அந்த அமைப்பை சேர்ந்த ஏழு பேரை, நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.
* பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், தினசரி மார்க்கெட் முன், பூர்ணசந்திரனுக்காக பா.ஜ., சார்பில் மோட்ச தீபம் நேற்று மாலை ஏற்றினர். அனுமதியின்றி மோட்ச தீபம் ஏற்றியதாக, பெண்கள் உட்பட, 16 பேரை, பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
இதபோல் காஞ்சிக்கோவில் நால்ரோட்டில், இந்து முன்னணி சார்பிலும், பெத்தாம்பாளையம் நால்ரோட்டில் பா.ஜ., சார்பிலும் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட, 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

