/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையை மறைத்த புகை பஸ் - பைக் மோதி இருவர் பலி
/
சாலையை மறைத்த புகை பஸ் - பைக் மோதி இருவர் பலி
ADDED : நவ 12, 2024 07:40 AM

அந்தியூர்,: ஈரோடு மாவட்டம், அத்தாணி அருகே சவுண்டப்பூரை சேர்ந்தவர் கந்தாயாள், 59. இவரது மகன் பூமேஸ்வரன், 29. அதே பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, தாயுடன், 'ஹோண்டா ஷைன்' பைக்கில், பூமேஸ்வரன் நேற்று அதிகாலை சென்றார்.
அங்கிருந்து வீட்டிற்கு காலை, 10:45 மணிக்கு கிளம்பினார். செம்புளிச்சாம்பாளையம் மயானம் அருகே வந்த போது, சாலையோரம் கொட்டியிருந்த குப்பை தீயில் எரிந்து கொண்டிருக்க, புகைமூட்டம், சாலையை மறைத்தது.
இதனால் சாலை தெரியாமல், எதிரே வந்த அரசு டவுன் பஸ் மீது, பூமேஸ்வரன் ஓட்டிச் சென்ற டூ - வீலர் மோதியது.
இதில், பூமேஸ்வரன் உடல் நசுங்கியும், தாய் கந்தாயாள் தலை துண்டாகியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆப்பக்கூடல் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான கந்தாயாளுக்கு ஒரு மகள் உள்ளார்.

