/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.48 லட்சம் ஹெராயினுடன் இருவர் கைது
/
ரூ.48 லட்சம் ஹெராயினுடன் இருவர் கைது
ADDED : டிச 19, 2024 12:48 AM
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், புதிய டூ--வீலர் ஸ்டாண்ட் அருகே, இரு வாலிபர்கள் போதை பொருட்களை வைத்திருப்பதாக, ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், கேரள மாநிலம், ஆலுவா வரை செல்ல முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்ததும், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் தெரிந்தது.
அவர்களிடம் இருந்து, 48 கிராம் ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு, 48 லட்சம் ரூபாய். போதை பொருளை வைத்திருந்த, அசாம் மாநிலம், மாரிகான் பகுதியை சேர்ந்த ஹசானுஜ் ஜமால், 32, அசாத்துல் இஸ்லாம், 29, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

