ADDED : செப் 26, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம். காங்கேயம் அருகே சிவன்மலை, சரவணா நகரை சேர்ந்தவர் சேதுபதி, 24. பனியன் கம்பெனி ஊழியர். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பழைய யமஹா, ஆர்.15 பைக் வாங்கி-யுள்ளார்.
இவர் வீட்டின் முன் பைக்கை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, 80 ஆயிரம் மதிப்புள்ள பைக் மாயமானது. காங்கேயம் போலீசார் விசாரித்து, பைக் திருட்டில் ஈடுபட்ட சிவன்மலை சூர்யபிரகாஷ், 21, மற்றும் 18 வயது சிறுவனை கைது செய்தனர்.

