/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலுக்குதீர்த்தக்குடம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
/
சென்னிமலை முருகன் கோவிலுக்குதீர்த்தக்குடம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
சென்னிமலை முருகன் கோவிலுக்குதீர்த்தக்குடம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
சென்னிமலை முருகன் கோவிலுக்குதீர்த்தக்குடம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
ADDED : டிச 21, 2024 01:38 AM
சென்னிமலை, டிச. 21-
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை, 8:௦௦ மணி பூஜைக்கு, காளைகள் மூலம், 1,320 படிக்கட்டுகள் வழியாக தீர்த்த குடம் கொண்டு செல்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.
காலை, 7:20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்து விடுவர். மலை கோவிலுக்கு படிக்கட்டு வழியாக, கோவில் பணியாளர்கள் காளையை ஓட்டி செல்வர்.
இதற்காக கோசாலையில் மூன்று பொதி காளை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு காளைக்கு வயதாகி விட்டதால், மற்றொரு காளை தயார் செய்யப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் பக்தர் ஒருவர் தானமாக கொடுத்த காளை மாட்டுக்கு, ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறப்பான உணவு கொடுத்து பராமரித்தனர். இதையடுத்து நேற்று வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளையுடன், புதியதாக வளர்க்கப்பட்ட காளையையும் பயிற்சிக்காக ஓட்டி
சென்றனர்.வழக்கமாக புதிய காளை மிரண்டு படியில் ஏறாது. ஆனால், புதிய காளை அப்படி எதுவும் செய்யாமல் சாவகாசமாக சென்றது. இனி பயிற்சிக்காக தினமும் காலை, மாலையில் சந்தன பொட்டு, சலங்கை அணிவித்து பூஜை செய்து, தீர்த்தக்குடம் வைக்காமல் பழக்கப்படுத்த அழைத்து செல்லப்படும். மூன்று மாதத்தில் நன்கு பயிற்சி அளித்த பிறகு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

