/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்புரவு தொழிலாளி உள்பட மூவர் மாயம்
/
துப்புரவு தொழிலாளி உள்பட மூவர் மாயம்
ADDED : ஆக 06, 2025 12:56 AM
ஈரோடு, ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நவநீதம், 37; இவர் மனைவி தீபா, 29; இருவரும் ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், தீபா வெளியேறினார். தாய் வீட்டுக்கு சென்றிருப்பார் என்று நவநீதம் நினைத்திருந்தார். இதுவரை வீடு திரும்பாததால், ஈரோடு தாலுகா போலீசில் நவநீதம் புகாரளித்துள்ளார்.
* ஈரோடு வெட்டுக்காட்டு வலசு அருமைகாரர் தோட்டத்தை சேர்ந்த குமரேசன் மகள் ரோசினி, 16; பாத்திர கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சகோதரியை கண்டுபிடித்து தருமாறு சகோதரர் ரஞ்சித் பிரசாந்த், வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தார்.
* கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, 36. டெய்லர்; கணவர் சிவக்குமார் , 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரு மகள்கள் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலிருந்த மூத்த மகள் தர்ஷினி, 17, திடீரென மாயமானார். கலைவாணி புகாரின்படி கோபி போலீசார் தேடி வருகின்றனர்.

