/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டளிக்க வந்தவர்கள் கிளம்பினர்: பஸ்களில் அலைமோதிய கூட்டம்
/
ஓட்டளிக்க வந்தவர்கள் கிளம்பினர்: பஸ்களில் அலைமோதிய கூட்டம்
ஓட்டளிக்க வந்தவர்கள் கிளம்பினர்: பஸ்களில் அலைமோதிய கூட்டம்
ஓட்டளிக்க வந்தவர்கள் கிளம்பினர்: பஸ்களில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஏப் 21, 2024 01:59 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர்,
கோவை கம்பெனிகளிலும், திருப்பூர் கார்மெண்ட்ஸ்களிலும்
குடும்பத்துடன் தங்கி, வேலை செய்து வருகின்றனர். ஒரு சிலர் வெளியூரில்
தொழில்கள் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலருக்கு சொந்த ஊரில் ஓட்டு
உள்ளது.
தேர்தலில் ஓட்டளிக்க சொந்த ஊருக்கு குடும்பத்துடன்
வந்தனர். ஓட்டளித்த நிலையில் வேலை செய்யும் ஊர்களுக்கு நேற்று
திரும்பினர். இதனால் புன்செய்புளியம்பட்டியிலிருந்து கோவை,
திருப்பூர் செல்லும் பஸ்களில் காலையில் இருந்தே கூட்டம் நிரம்பி
வழிந்தது. மதியம் வரை கூட்ட நெரிசல் காணப்பட்டது. வெளிமாநில
வாக்காளர்கள் விடிய விடிய ஊர் திரும்பியதால் பஸ்களில் கூட்டம்
அலைமோதியது.