/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்ற முடியாமல் திணறல் சா ண் ஏறினால் முழம் சறுக்கும் பொதுப்பணித்துறை

ADDED : ஜூலை 30, 2025 01:19 AM
பவானி, ஜூலை 30
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பவானி ஆற்றில் மைதானம் போல் பரவி ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை செடி, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, பழைய கூடுதுறை பாலம் பகுதியில் மேற்கொண்டு செல்ல முடியாமல் தேங்கியது.
இதனால் வெள்ளம் தேங்கி பாலத்துக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்க, பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம், ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் நேற்று முன்தினமே ஈடுபட்டனர். அத்தோடு பாலத்தில் பக்கவாட்டு சுவரின் கான்கிரீட்டையும் உடைத்தனர்.
இதனால் சிறிது இடைவெளி கிடைத்து வெள்ள நீர் பாய்ந்தோடியது. தங்கள் பணி இத்துடன் முடிந்து விட்டது என்று கருதி பொதுப்பணித்துறையினர் நடையை கட்டி விட்டனர். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, இரண்டாவது நாளாக நேற்றும், பவானி ஆற்றில் பாதிக்கு மேல் இருந்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாலத்தில் வேலை நடப்பதால் கூடுதல் பாலத்தில் அனைத்து வாகனங்களையும் விட்டனர். இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கம்போல் சிறிதளவு மட்டும் அகற்றிவிட்டு கிளம்பி விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினரை கேட்டபோது, 'பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் குறைந்த அளவே வருகிறது. பின்னர் அகற்றலாம்' என்று கூறினர்.