/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதையில் அகழி தோண்டிய விவகாரம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

ADDED : அக் 28, 2024 03:44 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே முத்துக்கவுண்டன்புதுாரில், நடந்து செல்லும் பாதையில், அகழி போல் குழி பறித்ததால், தங்கள் குழந்தை-களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை என்று கூறி, இப்பகு-தியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் அந்தியூர் தாலுகா அலுவல-கத்தில் மனு கொடுத்தனர்.
அதிகாரிகள் சமாதானத்தை ஏற்காமல் இரண்டு நாட்களாக, தங்கள் குழந்தைகளுடன் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர் தரப்பினரை அழைத்து அதி-காரிகள் பேசினர்.அப்போது அது தங்கள் பட்டா நிலம் என்றும், குழந்தைகள் செல்-வதற்கு வேறு வழித்தடம் தருகிறோம் என்றும் கூறினர். இதை ஏற்க மறுத்து போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர்.இந்நி-லையில் புகாரை கலெக்டருக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தாசில்தார் கவியரசு தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த மக்கள், இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, வீட்டுக்கு நள்ளிரவில் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியும், கைகளில் கறுப்பு கொடியேந்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.