ADDED : ஜூன் 29, 2024 02:49 AM
லோக்சபா தேர்தலால் மூன்று மாதத்துக்கு பின் நேற்று நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில், சாயக்கழிவு வெளியேற்றம், வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு என சரமாரியாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதற்கு அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளிக்க, சில விவசாயிகள் சரியான எதிர் கேள்வி கேட்டனர். இதனால் பல முறை கோபமடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ''நீங்கள் எந்த சங்கத்துக்கும் மாவட்ட, மாநில, தேசிய பொறுப்பில் வேண்டுமானாலும் இருங்கள். அதிகாரிகள் பதில் கூறும்போது குறுக்கே பேசாதீங்க. கோரிக்கைகளை மனுவாக கொடுத்த பிறகு, மறுபடி பேசாதீர்கள்,'' என்று சற்றே மிரட்டும் தொனியில் பேசினார்.
இதனால் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் அமைதியாகினர்.
'அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக கூறினால், மிரட்டுவது போல் கலெக்டர் பேசுகிறாரே?' என்று பல விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

