/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு
/
வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு
ADDED : மார் 06, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த, அடையாளம் தெரியாத முதியவரின் உடலை போலீசார் மீட்டனர்.
கோபி
அருகே, வண்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில், 60 வயது
மதிக்கத்தக்க முதியவரின் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு
நேற்று தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் மற்றும் நம்பியூர்
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பெருந்துறை
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம்
தெரியதாத முதியவரின் சுயவிபரம் தெரியாததால், கடத்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.

