/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம் கோவில் பூசாரிகள் சங்கம் புகார்
/
கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம் கோவில் பூசாரிகள் சங்கம் புகார்
கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம் கோவில் பூசாரிகள் சங்கம் புகார்
கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம் கோவில் பூசாரிகள் சங்கம் புகார்
ADDED : நவ 12, 2024 01:47 AM
கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம்
கோவில் பூசாரிகள் சங்கம் புகார்
-நமது நிருபர்-
ஓய்வூதிய விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், வாழ்வாதாரம் பாதிப்பதாக, கோவில் பூசாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத கோவில்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற, 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள், ஓய்வூதியம் பெற வேண்டி விண்ணப்பம் அளித்து காத்திருக்கின்றனர். வழக்கமாக, இது போன்ற விண்ணப்பங்களை, 30 நாட்களில் பரிசளித்து, விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவி ஆணையர் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், விரைவாக, சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பினால் தான், அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதிய பூசாரி களுக்கு, உரிய காலத்தில் ஓய்வூதியம் கிடைக்க _வழியேற்படும்.
ஆனால், பூசாரிகள் அளிக்கும் ஓய்வூதிய விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட உதவி ஆணையர் அலுவலகங்களில், மாதக்கணக்கில், பரிசீலிக்கப் படாமலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வயது முதிர்ந்த பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறுமையில் தவித்து வருகின்றனர். எனவே, உதவி ஆணையர் அலுவலகங்களில் பெறப்படும் ஓய்வூதிய விண்ணப்பங்களை பெற்ற தற்கான ஒப்புகை சீட்டு மற்றும் விண்ணப்பம் ஆகியவை, சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

