/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொத்துக்காக தாயை அடித்து கொன்ற மகன் சுற்றிவளைப்பு
/
சொத்துக்காக தாயை அடித்து கொன்ற மகன் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 28, 2025 03:15 AM
ஈரோடு: சொத்துக்காக தாயை அடித்து கொலை செய்த மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி - ருக்மணி, 65, தம்பதியின் மகன் ரவிக்குமார், 43; மகள் பிரியதர்ஷினி. இவர், 14 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து, கணவருடன் சென்று விட்டார். நேற்று மாலை, 5:30 மணியளவில் ருக்மணி, வீட்டில் இறந்து கிடப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று பார்த்த போது, ருக்மணி சடலம் கிடந்தது. வீட்டில் மகன் ரவிக்குமாரும் இருந்தார். அவரிடம் விசாரித்ததில், சொத்துக்காக மரக்கட்டை மற்றும் கம்பியால் தாயை தாக்கி கொலை செய்தது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு தாயை கொலை செய்து விட்டு, வீட்டிலேயே இருந்த ரவிக்குமாரை, போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
போலீசார் கூறியதாவது:
பிச்சாண்டாம்பாளையத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம், பழனிசாமி பெயரில் இருந்தது. இதை தன் பெயருக்கு எழுதி தருமாறு தந்தையுடன் தகராறு செய்து, 2022 மே 2ல் அவரை மரக்கட்டையால் அடித்து ரவிக்குமார் கொலை செய்தார். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். ஜாமினில் வந்த பின் தாயுடன் வசித்தார். தற்போது அவரையும் கொலை செய்துள்ளார்.
இவ்வாறு கூறினர்.

